அடுத்த கல்வியாண் முதல் 2 ஆண்டு கால M.A., படிப்பை அறிமுகம் செய்ய சென்னை IITமுடிவு செய்துள்ளது.
சென்னை IIT-ல் கெமிக்கல் என்ஜினியரிங், பயோடெக்னாலஜி, சிவில், எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல் என்ஜினியரிங் உள்ளிட்ட பல வகையான தொழில்நுட்ப படிப்புகள் கற்று தரப்படுகிறது. இது தவிர்த்து ஒரு சில Integrated ( 5ஆண்டு காலம் ) கலை, அறிவியல் படிப்புகளும் பயிற்றுவிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், அடுத்த கல்வியாண்டு முதல் M.A., in Development Studies, M.A.,in English Studies, M.A., in Economics ஆகிய 3 படிப்புகளை 2 ஆண்டுகால படிப்புகளாக அறிமுகம் செய்ய சென்னை IIT முடிவு செய்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
5 ஆண்டுகள் Integrated படிப்பாக இருப்பதை, 2 ஆண்டுகள் படிப்பாகவும் அறிமுகம் செய்து, இளங்கலை முடித்தவர்கள் நேரடியாக முதுகலை படிப்பில் சேரவும் சென்னை IIT நடவடிக்கை எடுத்து வருகிறது.
மானுடவியல் மற்றும் சமூக அறிவியல் நுழைவுத் தேர்வின் ( HSEE ) அடிப்படையில் 2ஆண்டுகால M.A., படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றும், ஒவ்வொரு பிரிவிலும் 25 சதவீத இடங்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்களுக்கு கட்டாயமாக ஒதுக்கப்படும் என்றும் சென்னை ஐ.ஐ.டி. நிர்வாகம் தெரிவித்துள்ளது.