கஸ்தம்பாடி கிராமத்தில் வீதிகளில் மழை நீர் தேங்கி கிடப்பதால் வீட்டை வெளியே வர முடியாமல் மக்கள் பரிதவித்து வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி களம்பூர் படவேடு மற்றும் கஸ்தம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கனமழை பெய்தது. இதில் கஸ்தம்பாடி கிராமத்தில் உள்ள தெருக்களில் மழை நீர் இரண்டு அடிக்கு மேல் தேங்கின. சில தெருக்களில் மழை நீர் வீட்டுக்குள் புகுந்ததால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் வீட்டுக்குள்ளேயே முடங்கினர்.
மேலும் மாணவர்கள் வீதியில் உள்ள மழை நீரில் செல்ல முடியாமல் தவித்தனர். எனவே கஸ்தம்பாடி கிராமத்தில் மழை நீர் வெளியேற கழிவு நீர் கால்வாய் அமைத்து சாலை வசதி அமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
—அனகா காளமேகன்







