லோகேஷ் கனகராஜின் ‘கைதி’ படம் இந்தியில் ‘போலா’ என்ற பெயரில் ரீமேக்காகியுள்ள நிலையில், இப்படத்தில் இருந்து 6 நிமிட சண்டைக்காட்சியைப் படக்குழு வெளியிட்டுள்ளது.
போலா அஜய் தேவ்கன் இயக்கி தயாரித்த இந்தி மொழி அதிரடி திரில்லர் திரைப்படமாகும். போஸ்டர்கள் மற்றும் டீசர் ஏற்கனவே படத்திற்கான ஹைப்பை உருவாக்கியுள்ளது. இப்போது, அஜய் தேவ்கன் படத்திலிருந்து 6 நிமிட ஆக்ஷன் பேக் செய்யப்பட்ட பைக்-டிரக் சேஸ் காட்சியை படக்குழு வெளியிட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
நேற்று, அஜய் தேவ்கன் போலா திரைப்படத்தின் 6 நிமிட பைக்-டிரக் சேஸ் ஆக்ஷன் காட்சியை வெளியிட்டு, “போலாவிலிருந்து 11 நாளில் எடுக்கப்பட்ட 6 நிமிட பைக்-டிரக் சேஸ் காட்சியின் ஒரு பார்வை இதோ” என்று அப்பதிவில் கூறப்பட்டுள்ளது. “இந்தப் படத்தின் ஆக்ஷன் எனக்கு அனைத்தையும் கற்றுக் கொடுத்த எனது தந்தை ஸ்ரீ வீரு தேவ்கனுக்கு சமர்ப்பணம்” என்ற வாசகத்துடன் வீடியோ தொடங்குகிறது.
வீடியோவில், அஜய் தேவ்கன் அபாயகரமான ஆக்ஷன் காட்சியைத் தானே நிகழ்த்திக் காட்டினார். மேலும் 3 மாதங்கள் திட்டமிடப்பட்ட பிறகு, அதிவேக ஸ்டண்ட், கிராஷ்கள் அடங்கிய அதிரடி காட்சி 11 நாட்களுக்குள் படமாக்கப்பட்டது.
6 நிமிட த்ரில்லான வீடியோவைப் பார்த்த ரசிகர்களால் நடிகரின் திறமையைப் பாராட்டி வருகின்றனர். அஜய் தேவ்கனின் போலாவில் தபு, தீபக் டோப்ரியால், அமலா பால், சஞ்சய் மிஸ்ரா, வினீத் குமார் மற்றும் கஜராஜ் ராவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஆக்ஷன் த்ரில்லர் படமானது லோகேஷ் கனகராஜின் கைதி 2019 இல் வெளியான படத்தின் ரீமேக் ஆகும். இப்படம் மார்ச் 30, 2023 அன்று திரையரங்குகளில் வர உள்ளது.