சாத்தான்குளத்தில் திடீரென பெய்த ஆலங்கட்டி மழை!

சாத்தான்குளம் சுற்று வட்டார பகுதிகளில் திடீரென ஆலங்கட்டி மழை பெய்தது. தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு ஆங்காங்கே மிதமான மழையும், ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.…

சாத்தான்குளம் சுற்று வட்டார பகுதிகளில் திடீரென ஆலங்கட்டி மழை பெய்தது.

தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு ஆங்காங்கே மிதமான மழையும், ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இதையடுத்து துாத்துக்குடி மாவட்டத்தில் காலை முதல் வெயில் அதிகமாக காணப்பட்டது. ஆனால் மதியம் 1 மணிக்கு பிறகு அம்மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கருமேகங்கள் சூழ்ந்தது.

அப்போது சாத்தான்குளம் சுற்று வட்டார பகுதிகளான பேய்க்குளம், மேல பேய்குளம், கோமா நேரி, பழனியப்புரம் உள்பட பல்வேறு பகுதிகளில் திடீரென ஆலங்கட்டி மழை பெய்தது. இதனை மக்கள் அனைவரும் ஆச்சரியத்துடன் பார்த்து கையில் எடுத்து விளையாடி மகிழ்ந்தனர்.

—அனகா காளமேகன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.