செய்யாறு பகுதி, தண்டரை கிராமத்தில் கனமழை காரணமாக வீதிகளில் மழை நீருடன் கழிவுநீர் கலந்து ஓடுவதால், நோய் தொற்று பரவும் அபாயம் நிலவி வருகிறது.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு ஒன்றியத்திற்குட்பட்ட தண்டரை ஊராட்சியில் உள்ள ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதிகளில் 300 க்கும் மேற்பட்ட குடும்பங்களில் 500 க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். நேற்று இரவு முழுவதும் செய்யாறு பகுதியில் பெய்த கனமழையால், ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் உள்ள வீதிகள் முழுவதும் மழை நீர் தேங்கியுள்ளதால், பொதுமக்கள் நடமாட முடியாமல் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
வீதிகளில் தேங்கியிருக்கும் மழை நீரோடு அப்பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாயும் கலந்து வருகிறது. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசியும் மற்றும் நோய் தொற்று பரவும் அபாயமும் நிலவி வருகிறது.
எனவே, தண்டரை ஊராட்சியில் உள்ள ஆதிராவிடர் குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைக்க செய்யாறு ஒன்றியம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தண்டரை ஊராட்சி பொதுமக்கள் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
–சௌம்யா.மோ






