இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி, மழை காரணமாகத் தாமதமாகியுள்ளது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், முதன் முறையாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியை நடத்துகிறது. இதன் இறுதிப் போட்டிக்கு இந்தியா- நியூசிலாந்து அணிகள் முன்னேறியுள்ளன. இறுதிப் போட்டி இங்கிலாந்தின் சவுத்தாம்டன் நகரில் இன்று இந்திய நேரப்படி மாலை 3 மணிக்குத் தொடங்க இருந்தது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி என்பதால், ரசிகர்கள் மத்தியிலும் கிரிக்கெட் வீரர்கள் மத்தியிலும் அதிக எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.
இந்நிலையில் சவுத்தம்டனில் இன்று காலை முதலே மழை பெய்து வருவதால், போட்டி துவங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.மழை தொடர்ந்து பெய்து வருவதால் முதல் நாள் ஆட்டத்தின் முதல் பகுதி ரத்து செய்யப் பட்டுள்ளது.
சவுத்தாம்டனில் அடுத்த 5 நாள்களுக்கு மழை இருக்கும் என அந்நாட்டு வானிலை மையம் தெரிவித்துள்ளதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.







