பெண் வழக்கறிஞருக்கு முன்ஜாமீன் மறுப்பு; மகளுக்கு முன்ஜாமீன்!

சென்னை சேத்துப்பட்டு சிக்னலில் போக்குவரத்து காவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர் தனுஜாவின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி. மகளுக்கு ஜாமீன் வழங்கியது சென்னை உயர்நீதிமன்றம். நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வந்த…

சென்னை சேத்துப்பட்டு சிக்னலில் போக்குவரத்து காவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர் தனுஜாவின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி. மகளுக்கு ஜாமீன் வழங்கியது சென்னை உயர்நீதிமன்றம்.

நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், தொற்றைக் கட்டுப்படுத்த மாநில அரசுகள் பல கடும் கட்டுப்பாடுகளை அறிவித்தன. தமிழகத்தில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு பொது மற்றும் தனியார் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டது.

இந்த சூழலில் சென்னையில் போக்குவரத்து காவல் பணியில் ஈடுபட்டிருந்த தலைமை காவலரை காரில் வந்த வழக்கறிஞர் தனுஜா மரியாதைக் குறைவாக பேசிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானது. இந்நிலையில் தலைமைக் காவலர் அளித் புகாரின் பேரில் காவல்துறை பெண் வழக்கறிஞர் மற்றும் அவரது மகள் மீது வழக்குப்பதிவு செய்தது.

வழக்குப்பதிவையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் தனுஜா மற்றும் அவரது மகள் ஆகியோர் முன் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில், இந்த மனுவை விசாரித்த நீதிபதி தண்டபாணி தவறு செய்யும் வழக்கறிஞர் மீது பார் கவுன்சில் தாமாக முன் வந்து நடவடிக்கை எடுப்பது தொடர்பாக விதிகளை கொண்டு வரவேண்டும் என்று
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும், முன்ஜாமீன் கோரியிருந்த இருவரில் தனுஜாவின் மகளுக்கு மட்டுமே ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

முன்னதாக வழக்கறிஞர் தனுஜாவின் வீடியோவிற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.