நாடு முழுவதும் தென்மேற்குப் பருவமழை விலகியுள்ளது என்றும், தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால், ஆந்திரப் பிரதேசத்தின் கடலோரப் பகுதிகள், ராயலசீமா, கர்நாடகாவின் தெற்கு உள் மாவட்டங்கள், கேரளா மற்றும் மாஹே பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை நேற்று தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று முதல் கனமழை கொட்டி வருகிறது. இந்த நிலையில் இன்று மாலை 4 மணி வரை 21 மாவட்டங்களில் மழை பேய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.
அந்தன்படி தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, கடலூர், நீலகிரி, கரூர், ராமநாதபுரம், கோயம்புத்தூர், தேனி, தென்காசி, தேனி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.




