கோவை காந்திபுரத்தில் ரூ.300 கோடி மதிப்பீட்டில் 1.98 லட்சம் சதரடியில் 7 தளங்கள் கொண்ட பெரியார் அறிவுலகம் மற்றும் அறிவியல் மையத்தை முதலமைச்சர் விஜய் இன்று திறந்து வைத்தார்.
இதற்காக கோவை வந்தடைந்த முதலமைச்சர் விஜய் விமான நிலையத்தில் இருந்து பெரியார் அறிவுலகம் அமைந்துள்ள காந்திபுரம் வரை ரோட்ஷோ சென்றார். அப்போது சாலையின் இரு புறமும் திரண்டிருந்த பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் முதலமைச்சர் விஜய்க்கு மலர்கள் தூவியும், பரிசுகள் வழங்கியும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதனைத்தொடர்ந்து பெரியார் அறிவுலகத்தில் வந்திறங்கிய முதலமைச்சர் விஜய்க்கு அரசு காவல்துறை சார்பில் அணிவகுப்பு மறியாதை வழங்கப்பட்டது. பின்னர் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மலர்கொத்து கொடுத்து முதலமைச்சரை வரவேற்றனர். பின்னர் பெரியார் அறிவுலகத்தின் முகப்பில் நிறுவப்பட்டுள்ள பெரியார் சிலையை திறந்து முதலமைச்சர் விஜய் திறந்து வைத்தார். பின்னர் முதல் வாசகராக பதிவேட்டில் கையெழுத்திட்டார்.
இதனையடுத்து ரூ.300 கோடி மதிப்பில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட பிரம்மாண்ட பெரியார் அறிவுலகத்தை முதலமைச்சர் விஜய் திறந்து வைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவந்தார். பின்னர் அறிவுலகத்தில் உள்ள வரவேற்பரை, அறிவியல் மையம், குழந்தைகள் நூலகம், டிஜிட்டல் நூலகம் உள்ளிட்ட வற்றை பார்வையிட்ட்டார். அவருக்கு பள்ளி மாணவர்கள் மற்றும் அதிகாரிகள் அறிவியல் சாதனங்கள் குறித்தும், நூலகத்தின் சிறப்பம்சங்கள் குறித்தும் விளக்கி கூறினர்.
இதனைத்தொடர்ந்து பெரியார் அறிவுலக வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவில் கலந்து கொண்ட முதலமைச்சர் விஜய் ரூ.408 கோடி மதிப்பீட்டில் 89 முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்தார். மேலும் ரூ.32.32 கோடி மதிப்பிலான 144 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
பின்னர் ரூ 34.72 கோடியில் 9,343 பயணாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் மாற்றுத்திறநாளி பயணாளிகளுக்கு செயற்கை கால் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை அவர்களின் இருக்கைக்கே சென்று வழங்கினார்.




