முக்கியச் செய்திகள் மழை தமிழகம்

4 நாட்களுக்கு தமிழ்நாட்டில் மழை

வரும் 24ம் தேதி வரை தமிழ்நாட்டில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், தென் தமிழக கடலோர பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக இன்று தென்தமிழகம் மற்றும் வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

நாளை தென்தமிழகம், வட தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், நாளை மறுநாள் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வரும் 23ஆம் தேதி உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் 24ம் தேதி தென்தமிழகம், வட தமிழக உள் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பாலியல் வன்கொடுமைக்கு பலியான சிறுமி; கடும் நடவடிக்கை எடுக்க ராமதாஸ் வலியுறுத்தல்

G SaravanaKumar

தமிழகத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் – டி.டி.வி.தினகரன்

Web Editor

விவசாயிகளிடம் இருந்து 1,000 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு

Arivazhagan Chinnasamy