இரவு 7 மணி வரை 22 மாவட்டங்களில் மழை!

தமிழகத்தில் இரவு 7 மணி வரை 22 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சுமார் 1.5 கிமீ உயரம் வரை தெற்கு உள் கர்நாடகா முதல் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் வரை தமிழகம் வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது.

இதன் காரணமாக தமிழகத்தில் இரவு 7 மணி வரை சேலம், பெரம்பலூர், நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், தர்மபுரி, ஈரோடு மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

மேலும் திருவள்ளூர், கிருஷ்ணகிரி, திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, விழுப்புரம், மதுரை, திருப்பூர், கோயம்புத்தூர், திருவண்ணாமலை மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.