இந்திய அணிக்கு 160 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது ஆப்கானிஸ்தான்!

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் இந்திய அணிக்கு 160 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இந்த 3 போட்டிகளும் டெல்லியில் நடக்கின்றன. முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், இரு அணிகள் இடையிலான இரண்டாவது டி20 போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி தடுமாறியது. இந்திய அணி சார்பில் முதல் ஓவரை வீசிய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா மெய்டன் ஓவர் வீசி அசத்தினார். இதனைத்தொடர்ந்து அர்ஷ்தீப் வீசிய இரண்டாவது ஓவரில் ஆஃப்கானிஸ்தான் வீரர் ஹ்மானுல்லா குர்பாஸ் ரவி பிஷ்னாயிடம் கேட்ச் கொடுத்து ஆடமிழந்தார். இதனைத்தொடர்ந்து வந்த வீரர்கள் அனைவரும் சொர்ப்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். நிதானமாக ஆடிய கேப்டன் இப்ராஹிம் சத்ரான் அதிகபட்ச ஸ்கோராக 33 பந்துகளில் 37 ரன்கள் எடுத்தார். மேலும் ரஷித்கான் 28 ரன்களும், ரசூலி 26 ரன்களும் எடுத்தனர்.

இந்திய அணி சார்பில் அபாரமாக பந்தி வீசிய நிதிஷ் குமார் ரெட்டி 34 ஓவர்கள் வீசி 24 ரன்களை கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதேபோல் அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டுகளையும், பும்ரா, அக்ஸர் படேல், ரவி பிஷ்னாய் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இதனால் 20 ஒவர் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 8 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்தது. 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இந்திய அணி ஆடி வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.