தமிழ்நாட்டில் அடுத்த ஐந்து நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்டிருந்த வானிலை அறிக்கையில், இன்று தென்தமிழகம், வட தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், நாளை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், தென் தமிழ்நாட்டின் கடலோர பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில், இன்று முதல் வரும் 25-ஆம் தேதி வரை இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அண்மைச் செய்தி: முதலமைச்சருடன் ராகுல் காந்தி சைக்கிள் ஓட்ட விருப்பம் – சட்டப்பேரவையில் காங்கிரஸ் உறுப்பினர் செல்வப்பெருந்தகை தகவல்.
அதிலும், குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் மழைக்கு வாய்ப்பிருப்பதால், சேலம், நாமக்கல், கோயம்புத்தூர், திருப்பூர், தருமபுரி மாவட்டங்களில் மழை பெய்யும் எனக் கூறப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








