சென்னை ஐஐடியில் 12 பேருக்கு கொரோனா தொற்று

சென்னையில் உள்ள ஐஐடியில் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்படுள்ளது. தமிழ்நாட்டில் நேற்று 31 பேருக்கு கொரோனா தெற்று உறுதியானது. இதனால் 243 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். அதிலும், சென்னையில் மட்டும் அதிகபட்சமாக…

சென்னையில் உள்ள ஐஐடியில் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்படுள்ளது.

தமிழ்நாட்டில் நேற்று 31 பேருக்கு கொரோனா தெற்று உறுதியானது. இதனால் 243 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். அதிலும், சென்னையில் மட்டும் அதிகபட்சமாக 117 பேர் சிகிச்சை பெற்றுவந்தனர். இந்த நிலையில் சென்னை ஐஐடியில் மட்டும் நேற்று மூன்று பேருக்கு தொற்று உறுதியானது. இந்நிலையில் அவர்களுடன் தொடர்பில் இருந்த 9 பேருக்கு கொரோனா தொற்று இன்று உறுதியாகியுள்ளது.

அண்மைச் செய்தி: ‘நெல்லையப்பர் திருக்கோயிலில் 30 கோடி ரூபாய் செலவில் அடிப்படை வசதிகள்’ – அமைச்சர் சேகர் பாபு

இன்று காலை சென்னை ஐஐடியில் தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு மேற்கொண்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர், மீண்டும் தற்போது இரண்டாவது முறையாக ஆய்வு செய்து வருகிறார்.

டெல்லி, உத்தர பிரதேசம், ஹரியானா, மகாராஷ்டிரா போன்ற வட மாநிலங்களில் தினசரி தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதை சுட்டிக்காட்டி நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த நேற்று மாவட்ட ஆட்சியர்களுக்கு மருத்துவத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.