முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன், ராகுல் காந்தி சைக்கிள் ஓட்ட விருப்பம் தெரிவித்துள்ளதாக சட்டப்பேரவையில் காங்கிரஸ் உறுப்பினர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சரின் சைக்கிள் பயண புகைப்படங்கள் அவப்போது சமூக வலைதளங்களில், வைரலாக பகிரப்படும். இந்நிலையில் இன்று சட்டப்பேரவையில், விளையாட்டுத்துறை சார்ந்த அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து பேசிய சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை, போதி தர்மரின் மரபணுவில் வந்தவர்தான் முதலமைச்சர் ஸ்டாலின் என குறிப்பிட்டார்.
மேலும், முதலமைச்சரின் உங்களில் ஒருவன் நூல் வெளியிட்டு விழாவிற்கு வந்தபோது ஸ்டாலினின் வயது குறித்து ராகுல் காந்தி கேட்டறிந்தாகவும், அதற்கு, அவர் வாரம்தோறும் சைக்கிள் ஓட்டி வருவதாக, தாம் கூறியதாகவும் தெரிவித்தார். அடுத்த முறை வரும்போது முதலமைச்சர் ஸ்டாலினுடன் சைக்கிள் ஒட்ட வேண்டும் என்ற விருப்பத்தை ராகுல் காந்தி தெரிவித்ததாகவும் செல்வப்பெருந்தகை குறிப்பிட்டார்.
இதற்குமுன்பு ராகுல் காந்தி பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து சைக்கிள் பேரணி மேற்கொண்டார் அப்போது, மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. அதேபோல, நடிகர் விஜய் சட்டமன்ற தேர்தலின் போது சைக்கிளில் சென்று வாக்கு செலுத்தினார். அப்போது, சமூக வலைதளங்களில், மிகவும் பரவலாக பேசப்பட்டது. இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன், ராகுல் காந்தி சைக்கிள் ஓட்ட விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது மீண்டும் பேசு பொருளாக மாறியுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








