5 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை – வானிலை ஆய்வு மையம்

சென்னையில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு ஆந்திரா பகுதியின் மேல் நிலவும் வளி மண்டல கீழடிக்குச் சுழற்சி காரணமாகக் கோவை திருப்பூர் தேனி…

சென்னையில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தெற்கு ஆந்திரா பகுதியின் மேல் நிலவும் வளி மண்டல கீழடிக்குச் சுழற்சி காரணமாகக் கோவை திருப்பூர் தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து தற்போது, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், சென்னையில் மாலை 5 மணியிலிருந்து பல்வேறு பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர், இரவு 7 மணி அளவில் நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், ராஜா அண்ணாமலைபுரம், சாந்தோம், மயிலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

அண்மைச் செய்தி: ‘’அக்னி பத் திட்டத்தை கை விட வேண்டும்’ – இந்தியக் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்’

இதையடுத்து 7 மணி நிலவரப்படி அடுத்த மூன்று மணி நேரத்திற்கு, சென்னை, காஞ்சிபுரம் ,திருவள்ளூர் செங்கல்பட்டு வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும் எனவும், திருப்பூர், கோவை, சேலம் ,நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.