செங்கல்பட்டு மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிறப்பு அதிகாரியான அமுதா ஐஏஎஸ் ஆய்வு மேற்கொண்டார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி மகாலட்சுமி நகர் உள்ளிட்ட பகுதிகள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளை சிறப்பு அதிகாரியான அமுதா ஐஏஎஸ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பேசிய அவர், தாழ்வான பகுதியில் மழைநீர் வீட்டில் புகுந்துள்ளதால், அங்குள்ள மக்களை மீட்டு பாதுகாப்பான பகுதிகளுக்கு அழைத்து செல்கிறோம்.
நடக்க முடிந்தவர்கள் நடந்து வருகிறார்கள், நடக்க முடியாதவர்களை படகு மூலமாக மீட்டு பாதுகாப்பான பகுதிகளுக்கு அழைத்து செல்கின்றோம் எனவும், விரைந்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உதரவிட்டுள்ளதாகவும் சிறப்பு அதிகாரியான அமுதா ஐஏஎஸ் தெரிவித்தார்.
தொடர்ந்து, அரசு தரபில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் என பலரும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.








