13 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

தமிழகத்தில், கோவை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இன்று (நவம்பர் 6) இரவு 10 மணி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை நவம்பர் மாதத்தின் தொடக்கத்திலிருந்து பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழைப்பொழிவையே கொடுத்து வருகிறது. இந்நிலையில், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கேரளப் பகுதிகளிலிருந்து தெற்கு உள் கர்நாடகம் வரை சுமார் 0.9 கி.மீ. உயரத்தில் காற்றழுத்தத் தாழ்வுப் பாதை (Trough) நிலவி வருகிறது. இதன் காரணமாகத் தமிழகத்தின் 13 மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பின்படி, கோயம்புத்தூர், திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, மதுரை, நாமக்கல், சேலம், தென்காசி, தேனி, நீலகிரி, திருநெல்வேலி, திருப்பூர் மற்றும் விருதுநகர் ஆகிய 13 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இந்த மழைக்கான அறிவிப்பு இன்று (நவம்பர் 6) இரவு 10 மணி வரை அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.