”ராகுல் காந்தி, விஜயுடன் பேசியது கூட்டணிக்காக அல்ல” – திருநாவுக்கரசர் பேட்டி..!

மக்களவை எதிர்கட்சித்தலைவர் ராகுல் காந்தி தவெக தலைவர் விஜயுடன் பேசியது கூட்டணிக்காக அல்ல என்று முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டையில் முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,

”திமுக காங்கிரஸ் கூட்டணி என்றைக்கும் உறுதியாக இருக்கும். அதில்  எந்த விதமான குழப்பமும்  இருக்காது. அரசியல் கட்சிக்கு வரும் கூட்டங்களை வைத்தோ.. நடிகருக்கு வரும் கூட்டத்தை வைத்தோ.. வெற்றித் தோல்வியை நிர்ணயிக்க முடியாது. தேர்தல் முடிவு வரும் வரை விஜய் குறித்து  அனைவரும் கூறுவதும் ஆருடமாகத்தான் இருக்க முடியும்.

கரூர் சம்பவத்தின் போது ராகுல் காந்தி விஜயுடன் பேசியது கூட்டணிக்காக அல்ல. நடந்த சம்பவம் குறித்து வருத்தம் தெரிவிப்பதற்கு தான். விஜயோடு காங்கிரஸ் செல்ல வேண்டும் என்று நான் கூறவில்லை, செல்லக்கூடாது என்றும் நான் கூறவில்லை. தேர்தல் நேரத்தில் மக்கள் கொடுக்க முடிவு நடிகர் விஜய்க்கு பக்குவத்தை வரவைக்கும்”  என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.