உத்தரபிரதேசத்தில் வன்முறை நடந்த பகுதிக்கு செல்ல காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் லகிம்பூர் கெரி பகுதியில் கடந்த 10- ஆம் தேதி அரசு விழா ஒன்றுக்கு, துணை முதலமைச்சர் கேசவ் மவுரியா, மத்திய உள்துறை இணை மந்திரி அஜய் மிஸ்ரா ஆகியோர் சென்று கொண்டிருந்தனர். மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகள், அவர்களுக்கு எதிராக கருப்புக்கொடி காட்டினர். அப்போது மத்திய உள்துறை இணையமைச்சா் அஜய் மிஸ்ரா மகன் ஆசிஷ் மிஸ்ரா காரில் வந்ததாகவும், அவருக்குப் பாதுகாப்பாக வந்த தொண்டா்களின் காா் வேண்டுமென்றே, போராடும் விவசாயிகள் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில் நான்கு விவசாயிகள் உயிரிழந்தனா்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கோபமடைந்த விவசாயிகள், மோதிய காரை பிடித்து அதில் இருந்த ஓட்டுநா் உள்பட 4 பாஜகவினரை கும்பலாக தாக்கி கொலை செய்துவிட்டு காருக்கு தீயிட்டு கொளுத்திய தாகவும், இதனால்தான் லகிம்பூரில் வன்முறை ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனி டையே விவசாயிகள் மீது காா் வேண்டுமென்றே மோதுவதை உறுதிபடுத்தும் வகையில், விடியோ பதிவு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த விடியோவை பகிா்ந்துள்ள கங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, போராடும் விவ சாயிகளை, அமைச்சர் மகன் காரை ஏற்றிக் கொல்லும் விடியோ வெளியான பின்னும் அவரை கைது செய்யாமல் இருப்பதும், ஒரு பெண் தலைவரை (பிரியங்கா காந்தி) 30 மணி நேரம் தடுப்புக் காவலில் வைப்பதும் நாட்டின் அரசியலமைப்புச் சட்டம் ஆபத்தில் உள்ளதை காட்டுவதாகக் கூறியிருந்தார்.
இதற்கிடையே, ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் அடங்கிய 5 பேர் கொண்ட குழு இன்று லகிம்பூர் மாவட்டம் செல்ல திட்டமிட்டு இருப்பதாக, உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்திற்கு காங்கிரஸ் கட்சி கடிதம் அனுப்பியது. ஆனால், சிறிது நேரத்திலேயே ராகுல் காந்தி உள்ளிட்டோர் லகிம்பூர் செல்வதற்கு அனுமதி மறுக்கப் பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.