முக்கியச் செய்திகள் இந்தியா சினிமா

பிரபல நடிகர் அரவிந்த் திரிவேதி காலமானார்: ராவணனாக நடித்தவர்

ராமாயணம் தொடரில் ராவணனாக நடித்த பிரபல நடிகர் அரவிந்த் திரிவேதி காலமானார். அவருக்கு வயது 82.

ராமானந்த் சாகர் இயக்கத்தில் 1987 ஆம் ஆண்டு உருவான தொடர் ’ராமாயணம்’. தூர்தர் ஷனில் ஒளிபரப்பான இந்த தொடரில் ராமனாக, அருண் கோவில் நடித்திருந்தார். சீதையாக தீபிகா சிக்காலியா, லக்‌ஷ்மணனாக சுனில் லஹிரி, ராவணனான அரவிந்த் திரிவேதி, அனுமனாக தாராசிங் உட்பட பலர் நடித்தனர். இந்த தொடர் ஒளிபரப்பான நேரத்தில் இந்தியத் தொலைக்காட்சி வரலாற்றில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியாக இருந்தது.

இந்த தொடரில் ராவணனாக நடித்து புகழ்பெற்ற அரவிந்த் திரிவேதி, தொடர்ந்து இந்தி, குஜராத்தி படங்களில் நடித்து வந்தார். சுமார் 300 படங்களுக்கு மேல் நடித்துள்ள இவர், குஜராத் மாநிலம் சபர்கதா மக்களவைத் தொகுதியில் 1991 ஆம் ஆண்டு பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.

மும்பை காந்திவிலியில் வசித்துவந்த இவருக்கு நேற்றிரவு மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து உயிரிழந்தார்.

இதுகுறித்து அவர் உறவினர் ஒருவர் கூறும்போது, அரவிந்த் திரிவேதி கடந்த சில நாட்களாக உடல் நலமில்லாமல் இருந்து வந்தார். உடல் உறுப்புகள் செயல் இழந்ததை அடுத்து நேற் றிரவு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அடுத்த சில நிமிடங்களிலேயே அவர் உயிரிழந் தார். அவருடைய இறுதிச் சடங்கு இன்று காலை நடக்கிறது’ என்றார்.

அரவிந்த் திரிவேதி மறைவை அடுத்து சமூக வலைதளங்களில் ரசிகர்களும் நடிகர், நடிகைகளும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement:
SHARE

Related posts

“ராணுவ ஆராய்ச்சி நிறுவனம் கண்டுபிடித்த கொரோனா மருந்து எப்போது சந்தைக்கு வரும்?”

Gayathri Venkatesan

’அது நிச்சயதார்த்த மோதிரம்தான்’ ஒப்புக்கொண்டார் நயன்தாரா, திருமணம் எப்போது?

Gayathri Venkatesan

நடிகர் விவேக்கிற்கு திரைப் பிரபலங்கள் இரங்கல்!

Gayathri Venkatesan