சென்னையில் வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை, 15 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையின் மதிப்பை அடிப்படையாக வைத்து எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் மட்டுமின்றி சமையல் எரிவாயு சிலிண்டர் விலையையும் தீர்மானிக்கின்றன. அந்த வகையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினசரி மாற்றி அமைக்கப்படுகிறது. ஆனால் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மட்டும் மாதத்தில் முதல் மற்றும் பிற்பாதியில் மாற்றியமைக்கப்படும்.
இந்நிலையில் சென்னையில் வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை, 15 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில், வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு , 900 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்தது. இந்நிலையில், வீடுகளில் பயன் படுத்தப்படும், சமையல் எரிவாயு விலையை எண்ணெய் நிறுவனங்கள் மீண்டும் உயர்த்தியுள்ளன.
அதன்படி, ஒரு சிலிண்டர் விலை மேலும் 15 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், சென்னையில் வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 915 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதனால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.








