முக்கியச் செய்திகள் இந்தியா

போராட்டத்தின்போது உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் – ராகுல் காந்தி கோரிக்கை

போராட்டத்தின்போது உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.

மக்களவையில் பேசிய ராகுல் காந்தி, டெல்லியில் ஓராண்டாக நடைபெற்று வந்த போராட்டத்தில் 700 விவசாயிகள் உயிரிழந்ததாக கூறினார். விவசாயிகள் மற்றும் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் மோடி, தான் செய்த தவறை ஒப்புக்கொண்டதாக குறிப்பிட்டார்.

மேலும், போராட்டத்தில் எத்தனை விவசாயிகள் உயிரிழந்தனர் என்ற கேள்விக்கு, எந்த தகவலும் இல்லை என மத்திய விவசாயத்துறை அமைச்சர் பதிலளித்ததை அவர் சுட்டிக்காட்டினார். தொடர்ந்து பேசிய அவர், பஞ்சாப்பில் உயிரிழந்த 400 விவசாயிகளின் குடும்பங்களுக்கு அம்மாநில அரசு இழப்பீடு வழங்கியது தொடர்பான தகவல் தன்னிடம் உள்ளதாகவும்,

எதிர்க்கட்சிகள் விவசாயிகளின் பட்டியலை வைத்திருக்கும்போது மத்திய அரசு இல்லை எனக்கூறுவது நியாயமா என அவர் கேள்வி எழுப்பினார். எனவே, விவசாயிகளின் உரிமைகள் காக்கப்பட வேண்டும் என குறிப்பிட்ட ராகுல் காந்தி, உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

Advertisement:
SHARE

Related posts

தியேட்டர்கள் திறப்பது குறித்து ஊரடங்கிற்கு பின் முடிவு : மு.பெ.சாமிநாதன்

Jeba Arul Robinson

’எல்லா ஊரும் எங்கள் ஊர்தான், கொரோனா தடுப்பு பணியில் எந்த ஊரும் புறக்கணிக்கப்படவில்லை’: கோவையில் முதல்வர் பேட்டி

Halley Karthik

சஞ்சு சாம்சன் சரவெடி வீண்: ராஜஸ்தானை வீழ்த்தியது ஐதராபாத்

Ezhilarasan