நாகலாந்து சம்பவம்: மத்திய அரசு மீது ராகுல் காந்தி சாடல்

நாகலாந்தில் பொதுமக்கள் 13 பேர் கொல்லப்பட்ட சம்பவம் நெஞ்சை உலுக்குவதாக காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். நாகாலாந்து மாநிலம் மோன் மாவட்டத்தில் ஊட்டிங் பகுதியில் நிலக்கரி சுரங்கத்தில் பணிபுரிந்து விட்டு, திரும்பிய தொழிலாளர்கள்…

நாகலாந்தில் பொதுமக்கள் 13 பேர் கொல்லப்பட்ட சம்பவம் நெஞ்சை உலுக்குவதாக காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

நாகாலாந்து மாநிலம் மோன் மாவட்டத்தில் ஊட்டிங் பகுதியில் நிலக்கரி சுரங்கத்தில் பணிபுரிந்து விட்டு, திரும்பிய தொழிலாளர்கள் மீது பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர். சுரங்கத் தொழிலாளர்களை “நாகாலாந்து தேசிய சோசலிஸ்ட் கவுன்சில்” அமைப்பை சேர்ந்த பிரிவினைவாதிகள் எனக் கருதி, அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளூர் மக்கள் நடத்திய பதில் தாக்குதலில் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள் ளதாக பாதுகாப்புப் படை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ‘இந்த சம்பவம் மிகவும் கண்டிக்கத்தக்கது. தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்; சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ள உயர்மட்ட குழு அமைக்கப்படும்’ என நாகாலாந்து முதலமைச்சர் நைபியு ரியோ தெரிவித்துள்ளார்.

இந்த எதிர்பாராத தாக்குதல் சம்பவத்திற்கு தனது வருத்தத்தையும், உயிரிழந்த குடும்பத்தி னருக்கு தனது இரங்கலையும் தெரிவித்துள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்தச் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ள உயர்மட்ட குழு அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். ராணுவ தரப்பில் நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தாக்குதல் சம்பவம் பற்றி வதந்திகள் பரவுவதை தடுக்க அந்தப் பகுதியில் இணையதள சேவைகள் முடக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசை கடுமையாக சாடியுள்ளார். இதுபற்றி ட்விட்டரில் அவர், ’நாகலாந்தில் அப்பாவிகள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் இதயத்தை உலுக்கு கிறது . இதுபற்றி மத்திய அரசு, உண்மையான பதிலைத் தரவேண்டும். மக்களோ, படையினரோ பாதுகாப்பாக இல்லாதபோது மத்திய உள்துறை அமைச்சம் என்ன செய்துகொண்டிருக்கிறது? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.