முக்கியச் செய்திகள் தமிழகம்

முல்லை பெரியாறு அணை; உச்சநீதிமன்றத்தில் மேலும் ஒரு மனு தாக்கல்

இரவு நேரத்தில் கேரள பகுதி மக்களை அச்சுறுத்தும் வகையில் அணையில் இருந்து நீர் திறக்க தடை விதிக்க வேண்டும் என கேரளாவை சேர்ந்தவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

தமிழ்நாடு மற்றும் கேரளா இடையே முல்லை பெரியாறு அணை குறித்து அட்டிகடி சர்ச்சைகள் மூண்டு வருகின்றன. உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி அணையில் 142 அடியில் பல முறை கேரளா நீரை தேக்கியுள்ளது. இந்நிலையில், கேரள பகுதி மக்களை அச்சுறுத்தும் வகையில் அணையில் இருந்து திடீரென நீர் திறக்க தடை விதிக்க வேண்டும் என கேரளாவை சேர்ந்தவர் உச்சநீதிமன்றத்தில் கூடுதல் மனு தாக்கல் செய்துள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மனுவில், “அணை இயக்கம் தொடர்பாக தமிழகத்தின் திட்டம் , காகித அளவில்தான் இருக்கிறதே தவிர செயல்பாட்டில் இல்லை. அணையின் மதகுகள் திறப்பு குறித்து எந்த திட்டமும் இல்லை.

அணை மதகுகள் பொறுப்பற்ற முறையில் திறக்கப்படுகிறது, இதனால் கேரள மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். குறிப்பாக கடந்த 30ம் தேதி இரவோடு இரவாக உரிய முன்னறிவிப்பும் இன்றி தண்ணீரை திறந்து விட்டனர்.

இதன் மூலம் தமிழக அதிகாரிகள் அணையின் கீழ் பகுதியில் வசிக்கும் கேரள மக்களுக்கு சந்திக்கும் பிரச்சனை, அவர்களுக்கு ஏற்படும் விளைவை கருத்தில் கொள்ளவில்லை.

கடந்த 30 தேதி இரவு எந்த முன்னறிவிப்பு இன்றி முல்லை பெரியாறு அணையிலிருந்து திடீர் நீர் திறப்பு சம்பவத்துக்கும், அதனால் ஏற்பட்ட பாதிப்புக்கும் தமிழக அதிகாரிகளே பொறுப்பு.

அதேவேளையில் முல்லை பெரியாறு அணை திறப்பதால் தங்கள் தமிழக பகுதிக்கும், தங்கள் பகுதி மக்களுக்கும் எந்த பாதிப்பும் வந்து விடக்கூடாது என்பதில் தமிழக அதிகாரிகள் மிகவும் எச்சரிக்கையுடன் இருந்துள்ளனர்.

எனவே இந்த விவகாரங்களை கருத்தில் கொண்டு முல்லை பெரியாறு அணையில் அபாயம் இல்லாத அளவுக்கு நீர் மட்டத்தை பராமரிக்கவும், தேக்கவும் உத்தரவிட வேண்டும். மேலும், திடீரென இரவு நேரத்தில் கேரள பகுதி மக்களை அச்சுறுத்தும் வகையில் அணையில் இருந்து நீர் திறக்க தடை விதிக்க வேண்டும்.” என்று மனுவில் வலியுறுத்தியுள்ளார்

மேலும், “முல்லை பெரியாறு அணை இயக்கத்தை கண்காணிக்கும் பாதுகாப்பு குழுவானது, அணையில் 24மணி நேரமும் பணியாற்றும் வகையில் ஒரு நிரந்தர மேற்பார்வையாளரை அணையின் நீர் வரத்து, அணை திறப்பை கண்காணிக்க நியமிக்க வேண்டும்.” என்றும் கேரளாவை சேர்ந்த ஜாய் ஜோசப் மனுவில் வலியுறுத்தியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

விராத் கோலிக்கு என்னாச்சு? 50 இன்னிங்ஸில் இப்படித்தான்

Gayathri Venkatesan

அர்ச்சகர்கள் வெளியேற்றப்படுகிறார்களா? அமைச்சர் சேகர்பாபு பதில்  

EZHILARASAN D

நிதிநிலை சீரானதும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும்: பழனிவேல் தியாகராஜன்