“இந்தியாவிற்கான கருத்துருக்கள்” நவீன இந்தியாவை கட்டமைக்கிறாரா ராகுல் காந்தி?

காங்கிரஸ் எம்.பியும், அந்த கட்சியின் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தியை அழைத்து சில நாட்களுக்கு முன்பாக “இந்தியாவிற்கான கருத்துருக்கள்” என்ற தலைப்பில் கேம்ரிட்ஸ் பல்கலைக்கழகம் உரை நிகழ்த்த வைத்துள்ளது. கிட்டத்தட்ட பாஜக இல்லாத எதிர்க்கட்சிகள்…

காங்கிரஸ் எம்.பியும், அந்த கட்சியின் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தியை அழைத்து சில நாட்களுக்கு முன்பாக “இந்தியாவிற்கான கருத்துருக்கள்” என்ற தலைப்பில் கேம்ரிட்ஸ் பல்கலைக்கழகம் உரை நிகழ்த்த வைத்துள்ளது. கிட்டத்தட்ட பாஜக இல்லாத எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து லண்டனில் நாடாளுமன்ற தேர்தலுக்காக அணி அமைக்கின்றனவோ என்று எண்ணும் அளவிற்கு அங்கு பேச்சாளர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். குறிப்பாக, ராகுல் காந்தியை தவிர்த்து, சீத்தாராம் யெச்சூரி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி) கே.டி. ராமாராவ் (தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி) தேஜவ்வி யாதவ் (ராஷ்ட்ரிய ஜனதாதளம்) மஹிவா மொய்த்ரா (திரிணாமுல் காங்கிரஸ்) ஆகிய பேச்சாளர்கள், இந்தியாவிற்கான கருத்துருக்கள் என்ற தலைப்பில் பேசியுள்ளார்கள்.

பாஜக விமர்சனமும் பாஜக அல்லாத எதிரணி கூட்டணியும்:

இந்த நிகழ்ச்சியில் ராகுல் காந்தி பேசிய பேச்சை பாஜக காட்டமாக விமர்சித்துள்ளது. வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தியாவைப் பற்றி வெளிநாட்டில் தரக்குறைவான சித்திரத்தை ஏற்படுத்தும் வகையில் ராகுல் காந்தி பேசிவிட்டதாக பாஜக கடுமையாக குற்றம்சாட்டியுள்ளது. அப்படி என்ன தான் ராகுல் காந்தி பேசிவிட்டார் என்று பார்த்தால், அவர் “எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றாதீர்கள்” என பாஜகவை விமர்சித்துள்ளார். கிட்டத்தட்ட பாஜக அல்லாத எதிர்க்கட்சிகள் அணி லண்டனில் ஒரு நீண்ட ஆய்வரங்கியில் பங்கேற்று உரை நிகழ்த்தியதும். இந்தியாவில் நடக்கும் அண்மைக்கால அரசியலைப் பற்றி கடுமையான விமர்சனங்களையும், தரவுகள் அடிப்படையிலான ஆய்வுரைகளை நிகழ்த்தியிருப்பதும் பாஜகவை ஆத்திரப்படுத்தி உள்ளது. ராகுல் காந்தி உள்ளிட்டோர் பேசிய பேச்சுக்கு கருத்தியல் ரீதியாக முறையான எதிர்வினையை அளிக்காமல் பாஜகவினர் கோபப்பட்டு இந்த பிரச்னையை அணுகுகின்றனர். கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ப்ரிட்ஜ் இந்தியா என்ற அமைப்பு ஒருங்கிணைத்த இந்த நிகழ்ச்சி ஏறக்குறை பாஜக அல்லாத மாற்று அணியை கட்டும் முகாந்திரத்துடன் தான் நடைபெற்றுள்ளது. ப்ரிட்ஜ் இந்தியா அமைப்பு என்பது தன்னை ஒரு “லாப நோக்கமற்ற சிந்தனைக் குழு” என்று பிரகடனப்படுத்துகிறது. ஆனால்,

இந்த நிகழ்ச்சியில், ராகுல் காந்தியின் பேச்சில் ஒரு விஷயத்தை கணிக்க முடிகிறது. காங்கிரஸ் கட்சி உதய்பூரில் நடத்தி முடித்த சிந்தனை அமர்வு நிகழ்ச்சியில் மாநில கட்சிகள் பாஜகவை முறியடிக்க திராணியற்றவை என விமர்சித்திருந்தார். காங்கிரஸ் கூட்டணியில் இருந்த திமுகவை தவிர மற்ற பல கட்சிகள் இந்த ராகுலின் பேச்சை கடுமையாக விமர்சித்தன. இதற்கு பதில் சொல்லும் விதமாக ராகுல் காந்தியின் கேம்ப்ரிட்ஜ் பேச்சு அமைந்துள்ளது. மாநில கட்சிகளுடன் காங்கிரஸ் கட்சி பெரியண்ணன் மனநிலையில் நடக்காது என உலகளவில் ராகுல் காந்தி வாக்குறுதி கொடுத்துள்ளார். இது சர்வதேச முதலாளிகளுக்கும் இந்தியாவில் உள்ள மாநில கட்சிகளுக்குமான வாக்குறுதியாக அமைந்துள்ளது.“கண்ணுக்கு தெரியாத கும்பல் இந்தியாவை ஆளுகிறது”:

ராகுல் காந்தியின் உரையில் மற்றொரு விஷயம் வெளிப்பட்டுள்ளது. அது, இந்தியாவை கண்ணுக்கு தெரியாத ஒரு கும்பல் ஆட்சி செய்கிறது என்கிறது. அதாவது, அமெரிக்காவை சி.ஐ.ஏ. ஆட்சி செய்வது போல், பாகிஸ்தானை ஐ.எஸ்.ஐ மறைமுகமாக ஆளுவதைப் போல் இந்தியாவை ஆர்.எஸ்.எஸ். அமைப்பும், அமலாக்க துறையும், சி.பி.ஐயும் மறைமுகமாக அதிகாரம் செலுத்துவதாக விமர்சித்துள்ளார். பாஜக எதிர்ப்பில் உறுதியாக இருக்கும் கட்சிகளின் தலைவர்களின் வீடுகளில் இந்த அமலாக்க துறையும் சிபிஐயும் சோதனை என்ற பெயரில் ஒடுக்கும் முயற்சியில் ஈடுபடுவதாக கூறினார். அதாவது, உதய்பூரில் காங்கிரஸ் கட்சியின் சிந்தனை அமர்வு நடந்து முடிந்த சில நாட்களிலேயே முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் வீட்டிலும் அவருக்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடக்கிறது. இது போன்ற நிகழ்வுகளைக் குறிப்பிட்டு, அமலாக்கத்துறை, சிபிஐ ஆகிய அமைப்புகளை கையில் வைத்துக்கொண்டு அரசியல் எதிரிகளை பாஜக ஒடுக்குகிறது எனக் கூறினார். அத்துடம், கண்ணுக்கு தெரியாத ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கொள்கைகள் அரசின் அஜெண்டாவாக திட்டங்களை மாற்றுகிறது என்பதை சுட்டிக்காட்டும் விதமாக அமைந்திருந்தது ராகுல் காந்தியின் அந்த உரை.

மக்கள் திரள் எழுச்சியை கோரும் ராகுல்:

ஆர்எஸ்எஸ் கட்டுப்பாட்டில் உள்ள அமைப்புகளை விடுவிக்க இந்திய அரசுக்கு எதிராக ஒரு பெரிய ‘வெகுஜன நடவடிக்கை’ அவசியம் என ராகுல் காந்தி பேசியுள்ளார். பாஜகவுக்கு எதிராக அரசியல் மீள் நடவடிக்கையில் ஈடுபடும் மாநில கட்சிகள், இந்தியாவில் நடப்பது வெறும் அரசியல் சண்டை அல்ல அது கண்ணுக்கு தெரியாத அமைப்புகள் மூலமாக பாஜக நடத்தும் அரசியலுக்கு எதிரான சண்டை என்பதை புரிந்து கொள்ள வேண்டும் எனக் கூறினார். உதய்பூர் மாநாட்டிற்கு பிறகு காங்கிரஸ் கட்சி பல சீர்திருத்த நடவடிக்கைகளை கையில் எடுத்துள்ளது. அதாவது, பாஜக எதிர்ப்பை தனி அமைப்பாக இல்லாமல், அதை, வெகுஜன மக்கள் திரள் எழுச்சி மூலமாக கட்டமைக்க வேண்டும் என்ற முடிவை கோரியுள்ளது. காங்கிரஸ் கட்சி அடிப்படையில் இந்த மாற்றத்தை அதன் வேர்களுக்குள் சென்று வெகுஜன நடவடிக்கைகள் நோக்கி நகரத் தொடங்கும் வகையில் கட்டமைக்கிறது.மாநில சுயாட்சியைக் கையில் எடுத்த ராகுல்:

ராகுல் காந்தியின் இந்த பேச்சில் மற்றொரு விஷயமும் பட்டவர்த்தனமாக வெளிப்பட்டுள்ளது. அது என்னவென்றால், மாநில சுயாட்சி. இந்தியாவை மாநிலங்களின் ஒன்றியம் என்றும் ஒரு தேசம் அல்ல என்றும் ராகுல் காந்தி அடிக்கடி பேசினார். இதன் மூலம், பாஜக – ஆர்.எஸ்.எஸ் கொள்கையான அகண்ட பாரதம் என்ற கொள்கைக்கு எதிராக இந்திய ஒன்றியத்தின் கட்டமைப்பின் மூலம் மாநில சுயாட்சியை ராகுல் உயர்த்தி பிடித்துள்ளார். இந்தியா மேலிருந்து கீழாக (டெல்லியில் இருந்து கன்னியாகுமரி வரையில் வளர்ச்சி) வளர்ச்சி அடையவில்லை. கிட்டத்தட்ட கீழ் மட்டமாக உருவெடுத்து நிற்கிறது. மாநிலங்களின் உரிமைகள் நசுக்கப்பட்டுள்ளன. மத்திய அரசு அதிகாரங்களை தனக்குள் வைத்துக்கொண்டு மாநிலங்களை ஒடுக்குகிறது என கடுமையான குற்றச்சாட்டுகள் அவரது உரையில் இடம்பெற்றிருந்தது. பாஜகவின் இந்த அதிகாரத் திணிப்புக்கு எதிராக, இந்திய மாநிலங்கள் அனைத்தும் ஒன்றிணைந்து பேச்சுவார்த்தை மூலம் சமாதானத்தை உருவாக்கியுள்ளன என்று ராகுல் காந்தி கூறினார்.கர்மாவிற்காக செயல்படும் பாஜக:

கர்மாவின்படி இந்தியா புவியியல் ரீதியாக ஒரு சிலருக்கு பகிர்ந்தளிக்கப்பட வேண்டிய என ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் பாஜகவும் விரும்புவதாக ராகுல் குற்றம்சாட்டினார். நீங்கள் தலித்துகள் அல்லது பிராமணர்களாக இருந்தாலும் அனைவருக்கும் சமமான வாழ்க்கையை பாஜக அளிக்காது என விமர்சித்தார். ஆனால், காங்கிரஸ் கட்சி அனைவருக்குமான இந்தியாவைக் கட்டமைக்க விரும்புவதாக கூறினார். ராகுலின் இந்த பேச்சு அண்மைக்காலமாக காங்கிரஸ் மீது இருந்த சில விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முயன்றுள்ளது.

மக்கள் திரள் எழுச்சியை கையில் எடுக்க மாநில கட்சிகளுக்கு அழைப்பு விடுத்தது. மாநில சுயாட்சியை வலியுறுத்தி ராகுல் பேசியது, கர்மாவிற்காக பாஜக செயல்படுகிறது என்ற சித்திரத்தை உருவாக்கியது என்பது சர்வதேச அரங்கில் ஒரு புதிய சிந்தனையை ராகுல் காந்தி கொண்டு சென்றுள்ளார். அதாவது, இந்தியாவில் அண்மைக்காலமாக நடக்கும் பிரித்தாளும் சூழ்ச்சியை முறியடித்து, ஒருங்கிணைந்த சமூகநீதியுடனான வளர்ச்சியை காங்கிரஸ் கட்சியால் அளிக்க முடியும் என்ற உத்தரவாதத்தை ராகுல் அளித்துள்ளார். ப்ரிட்ஜ் இந்தியா கூட்டம் உணர்த்தும் செய்தி ஒன்று தான் அசுர பலத்துடன் இருக்கும் பாஜகவை வீழ்த்த காங்கிரஸ் தலைமையில் மாநில கட்சிகளின் துணையோடு ஒரு அணியை உருவாக்க வேண்டும் என்பது தான் அது.அத்துடன், ராகுல் தலைமையில் பாஜக அல்லாத எதிர்க்கட்சிகள் அணி அமைப்பதால் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் முடிவு எவ்வாறு இருக்கும் என்பது மிகுந்த சுவாரஸ்யத்தை தரக்கூடும்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.