சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில்
அனுமதிக்கப்பட்டுள்ள நடிகரும் இயக்குனருமான டி.ராஜேந்தருக்கு தீவிர சிகிச்சை
அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து
மருத்துவமனை நிர்வாகமோ, குடும்பத்தினரோ முழுமையான தகவலை அளிக்க விரும்பவில்லை.
இருப்பினும் டி.ராஜேந்தர் உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் உலா வருகின்றன.
டி.ராஜேந்தருக்கு ரத்த குழாயில் ஏற்பட்டுள்ள பாதிப்பு காரணமாக ஸ்டென்ட்
வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தற்போது நலமுடன் இருப்பதாகவும் ஒரு தகவல்
வெளியாகியுள்ளது. நேற்று அவரது நெருங்கிய நண்பரிடம் தொலைபேசியில் நன்றாக
பேசியதாகக் கூறப்படுகிறது. இருப்பினும் டி.ராஜேந்தரை அமெரிக்கா அழைத்து செல்ல மகன் சிலம்பரசன் விருப்பம் தெரிவித்து இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் விசா
கிடைப்பதில் சிக்கல் நீடிப்பதால் சிங்கப்பூர் அல்லது மலேசியா அழைத்து
செல்லலாமா எனவும் குடும்பத்தினர் யோசனை செய்து வருவதாகவும் பேசப்படுவதால்
டி.ரஜேந்தருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து மருத்துவமனை நிர்வாகமோ
குடும்பத்தினரோ அறிக்கை வெளியிட்டால் மட்டுமே முழுமையான தகவல் வெளிவரும்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்