முக்கியச் செய்திகள் சினிமா

லாரன்ஸ் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்!

எப்போதும் லோகேஷ் கனகராஜ் படங்களில் லோகேஷ் உடன் இணைந்து கதை உருவாக்கத்திற்கு உதவும் ரத்தினகுமார், இப்படத்திற்கும் கதை விவாதத்தில் ஈடுபட்டு வருகிறார்.

ஆடை, மேயாத மான் படங்களை இயக்கிய ரத்ன குமார் சமீபத்தில் சந்தானத்தை வைத்து குலுகுலு என்ற படத்தை இயக்கினார். இப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றதோடு பல்வேறு தரப்பு மக்களின் பாராட்டுகளையும் பெற்றது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதுவரை இல்லாத வகையில் சந்தானம் சற்று சீரியஸான கேரக்டரில் இந்த படத்தில் நடித்திருந்தார். மேலும் கடைசியாகச் சந்தானம் நடிப்பில் வெளிவந்த டிக்கிலோனா, பிஸ்கோத், சபாபதி ஆகிய படங்கள் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. இந்த நிலையில் தான் இந்த குலுகுலு திரைப்படம் அவருக்கு ஒரு கம்பேக்காக அமையும் என எதிர்பார்க்கப்பட்டது.

காரணம் இயக்குநர் ரத்தினகுமார் மேயாத மான், ஆடை படங்களை இயக்கினார் என்பதாலும், மாஸ்டர், விக்ரம் படத்திற்கு வசன கர்த்தாவாக இருந்ததாலும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. ஆனால் அப்படம் எதிர்பார்த்த அளவிற்கு ரசிகர்களிடம் போதுமான வரவேற்பைப் பெறாமல் போனது.

இந்த நிலையில் விஜய்யின் வாரிசு படத்தைத் தொடர்ந்து விஜயின் 67-வது படம்,லோகேஷ் கனகராஜ் இயக்கத்தால் உருவாக உள்ளது. ஏற்கனவே இவர்களது கூட்டணியில் வெளியான “மாஸ்டர்” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்த படத்திற்குப் பிறகு விஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணி மீண்டும் இணைய உள்ள நிலையில், இந்த படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகள் நடந்து வருவதாகவும், எப்போதும் லோகேஷ் கனகராஜ் படங்களில் லோகேஷ் உடன் இணைந்து அவருடன் கதைக்கு உருவாக்கத்திற்கு உதவும் இயக்குநர் ரத்தினகுமார் இப்படத்திற்கும் கதை விவாதத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் தான் ரத்னகுமாரின் அடுத்து ராகவா லாரன்ஸ் நடிக்கும் புதிய படத்தை இயக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இப்படத்தின் கதை லோகேஷ் கனகராஜுடையது எனவும் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் உருவாகும் எனவும் கோலிவுட் வட்டாரத்தில் பரவலாகப் பேசப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கூடுதலாக ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் ஏற்படுத்த முதல்வர் உத்தரவு!

Halley Karthik

மகளிர் சுய உதவிக் குழு கடன்கள் விரைவில் தள்ளுபடி

Janani

திமுக எம்.பி கனிமொழி குணமடைய அமைச்சர் விஜயபாஸ்கர் வாழ்த்து!

Halley Karthik