6 நாட்களில் ‘பெத்தி’ படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா…?

ராம் சரண் நடிப்பில் வெளியாகியுள்ள பெத்தி திரைப்படம் உலகளவில் ரூ. 332 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது

உப்பென பட இயக்குநர் புஜ்ஜிபாபு சனா இயக்கத்தில் தெலுங்கு நடிகர் ராம் சரண் நடிப்பில் வெளியாகியுள்ள படம் பெத்தி. இப்படத்தில் கதாநாயகியாக பாலிவுட் நடிகை ஜான்வி கப்பூர் நடித்துள்ளார். மற்றொரு முக்கிய வேடத்தில் கன்னட நடிகர் சிவராஜ் குமார் நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் ஜகபதி பாபு, திவ்யேந்து, கிரண் சிங், போமன் இரானி, ஜான் விஜய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

மலைவாழ் கிராமத்தின் அடிப்படை வசதிகளுக்காக போராடும் இளைஞரான ராம் சரண் நடித்துள்ளார். அதற்காக கிரிக்கெட், குஸ்தி உள்ளிட்ட போட்டிகளில் பங்குபெற்று விளையாட்டு துறையில் சாதிக்க அவர் எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறுகிறதா அல்லது இல்லையா என்பதே ‘பெத்தி’ படக்கதை.

கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் பெத்தி திரைப்படம் வசூலில் குறைவில்லை. இந்த நிலையில் பெத்தி திரைப்படம் உலகளவில் ரூ.332 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.