ராகுலின் பாத யாத்திரையை விமர்சிக்க பாஜகவிற்கு தகுதியில்லை-நாராயணசாமி

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் பாதயாத்திரை குறித்து விமர்சனம் செய்ய பாஜகவிற்கு எந்த தகுதியும் இல்லை என புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார். புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.…

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் பாதயாத்திரை குறித்து விமர்சனம் செய்ய பாஜகவிற்கு எந்த தகுதியும் இல்லை என புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.

புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர் கூறியதாவது:

ராகுல் காந்தியின் பாத யாத்திரை மற்றும் அவரது டீ-சர்ட் குறித்து பொய்யான குற்றச்சாட்டை பாஜகவினர் தெரிவித்து வருகின்றனர். ஒரு நாளைக்கு 3 முறை பிரதமர் மோடி உடை மாற்றும்போது ராகுல்காந்தி குறித்து விமர்சனம் செய்ய பாஜகவிற்கு எந்த தகுதியும் இல்லை.

ராகுல் காந்தி மீதான விமர்சனத்தை பாஜக தவிர்க்க வேண்டும். மேலும், ராகுல்காந்தி குறித்து துணை நிலை ஆளுநர் தமிழிசை ஏளனமாக பேசினர். தெலங்கானா மாநிலத்தில் முதல்வர், அமைச்சர்கள் அவரை உதாசினப்படுத்துவதன் காரணமாக தமிழிசை செளந்தரராஜன் புதுச்சேரியில் இருந்து வருகிறார்.

தமிழிசை செளந்தரராஜன் மன நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அவர் நல்ல மனநல
மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற வேண்டும். தமிழிசை செளந்தரராஜன் அரசியல் செய்ய வேண்டும் என்றால் தனது பதவியை ராஜினாமா செய்து அரசியல் செய்ய வேண்டும்.

உயர் பதவியில் இருந்து கீழ்த் தனமான அரசியலை தமிழிசை செளந்தரராஜன்
செய்யக் கூடாது. மேலும் லஞ்சம் பெற்றுக் கொண்டு புதியதாக 6 வெளிநாட்டு மதுபானம் தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு புதுச்சேரி அரசு அனுமதி அளித்து உள்ளது. இதன் மீது
சிபிஜ விசாரணை நடத்த கோரிக்கை வைத்துள்ளேன்.

மேலும் முதல்வராக ரங்கசாமி பொறுப்பேற்கும் போதே பிரெஞ்சு குடியுரிமை
பெற்றவர்களின் வீடுகள், நிலங்கள் போலி பத்திரம் மூலம் அபகரிக்கப்படுகிறது.
நில அபகரிப்பில் ஈடுபடுபவர்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க
வேண்டும் என்றார் நாராயணசாமி.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.