இயக்குநர் பாரதிராஜாவின் உடல் நாளை சொந்த ஊரில் நல்லடக்கம் – குடும்பத்தினர் தகவல்..!

மறைந்த இயக்குநர் பாரதிராஜாவின் உடல் நாளை அவரது சொந்த ஊரில் அடக்கம் செய்யப்படுகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் பாரதிராஜ இன்று காலமானார். அவருக்கு வயது 84. இதனை தொடர்ந்து அவருக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

முதலமைச்சர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இளையாராஜா உள்ளிட்ட பலர் அவருக்கு நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளனர்

இந்த நிலையில் இயக்குநர் பாரதிராஜாவின் உடலை அவரது சொந்த ஊரான தேனியில் அடக்கம் செய்ய அவரது குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர்.

அதன்படி இயக்குனர் பாரதிராஜாவின் உடல் இன்று இரவு 7 மணி வரை நீலாங்கரை இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும். அதன் பின்னர் அவரது உடலை வத்தலகுண்டு அருகே உள்ள காட்ரோட் தோட்டத்திற்கு எடுத்துச் சென்று அடக்கம் செய்ய முடிவு செய்திருக்கிறார்கள். நாளை காலை சொந்த ஊரில் இறுதிச் சடங்கு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.