முக்கியச் செய்திகள் சினிமா

5 ஆண்டுகளுக்கு பிறகு விக்ரமின் துருவ நட்சத்திரம் – மாஸ் அப்டேட் கொடுத்த கவுதம்

கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் , ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவான துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் புதிய அப்டேட் தற்போது வெளியாகி உள்ளது .

கவுதம் மேனன் இயக்கத்தில், வெங்கட் சோமசுந்தரம், ரேஷ்மா கட்டாலா, செந்தில் வீராசாமி, பி.மதன் தயாரிப்பில் உருவான திரைப்படம் துருவ நட்சத்திரம். விக்ரம் கதாநாயகனாக நடித்துள்ள இந்த திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், ரித்து வர்மா , ராதிகா சரத்குமார், ப்ரிய தர்ஷினி என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இப்படத்தின் மூலம் விக்ரம் உடன் முதல் முதலாக கூட்டணி அமைத்தார் கெளதம்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

2017 ம் ஆண்டு தொடங்கிய இந்த திரைப்படம் 2018 ம் ஆண்டு மே மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் பல காரணங்களால் ஐந்து ஆண்டுகளாக திரைப்படம் வெளியாகாமல் இருந்தது. கடந்த மாதம் அப்படத்தின் இயக்குநர் கவுதம் மேனன் விக்ரம் உடன் இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டு ”நட்சத்திரங்கள் சீரமைக்கப்படும்”என்று பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டியில் துருவ நட்சத்திரம் படம் டிசம்பரில் திரையரங்குகளில் வெளியாகும் என்ற அறிவிப்பை இயக்குநர் கவுதம் வெளியிட்டுள்ளார். இதனால் விக்ரம் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். சமீபத்தில் இவர் இயக்கிய வெந்து தணிந்தது காடு திரைப்படம் நாளை வெளியாகிறது. இதற்கு அடுத்து கவுதம் மேனன் இயக்கி வெளிவரவுள்ள துருவ நட்சத்திரம் குறித்து ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

5 ஆண்டுகளுக்கு பிறகு வெளியாகும் இந்த படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது என்பது குறிப்பிடதக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கடந்த ஆறு மாதத்தில் இல்லாத அளவில் ஒரே நாளில் 81,466 பேருக்கு கொரோனா!

Halley Karthik

பெரம்பலூரில் சிறப்பு பொருளாதார மண்டலம்: மத்திய – மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

Jeba Arul Robinson

முகக்கவசம் உட்பட அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளையும் கைவிடுகிறது மகாராஷ்டிரா

Janani