முக்கியச் செய்திகள் தமிழகம்

மதுரையில் தற்காலிக கட்டிடத்தில் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி?

தமிழ்நாட்டுக்கு கூடுதல் கொரோனா தடுப்பூசி வழங்க வேண்டும், கருப்பு பூஞ்சை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ஆம்போடெரிசின்-பி மருந்து வழங்க வேண்டுமென மத்திய அரசை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

டெல்லியில் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷனை நேரில் சந்தித்த தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தமிழ்நாட்டுக்கு கூடுதல் கொரோனா தடுப்பூசி வழங்க வேண்டும், கருப்பு பூஞ்சை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ஆம்போடெரிசின்-பி மருந்து ஒதுக்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து பேட்டியளித்த ராதாகிருஷ்ணன், “மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண், நிதி ஆயோக் உறுப்பினர் உள்ளிட்டோரை சந்தித்தேன், தடுப்பூசி வழங்குவது தொடர்பாக பேசினேன், இதனையடுத்து 15,87,580 தடுப்பூசிகளை அடுத்த 2 நாட்களில் வழங்குவதாக உறுதி அளித்துள்ளனர். மேலும், மதுரை எய்ம்ஸ் கட்டுமானத்தை விரைவு படுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளனர்.”

“இதனைத் தொடர்ந்து கொரோனா 2வது அலையை கட்டுப்படுத்த தமிழ்நாடு எடுத்த நடவடிக்கை தொடர்பாக பாராட்டியுள்ளனர். குழந்தைகளுக்காக அவசர சிகிச்சைக்கான படுக்கை வசதிகளை உயர்த்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. செங்கல்பட்டு தடுப்பூசி மையம் தமிழக அரசு எடுத்து நடத்துவது தொடர்பாக தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் வரும் போது பேசப்படும். தமிழகத்துக்கு மாதம் 2 கோடி தடுப்பூசி தேவைப்படும்.” என்று ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். மேலும்,

“தற்போது, 12,15,30 லட்சம் என ஒவ்வொரு மாதமும் மத்திய அரசு மாநிலங்களுக்கு தடுப்பூசி அளவு அதிகரிக்கப்படும் என கூறியுள்ளனர். மேலும் மக்கள் தொகையை பொறுத்து ஒவ்வொரு மாநிலத்துக்கு தடுப்பூசி பகிர்ந்து அளிக்கப்படும் என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளதாக தெரிவித்துள்ளனர்.” மேலும்,

“ஏற்கனவே ஜம்மு -காஷ்மீரில் செயல்படுவதுபோல எய்ம்ஸ் கட்டுமானம் முடிவதற்கு முன் தாற்காலிக கட்டிடத்தில் மருத்துவமனையை செயல்படுத்தலாம் என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 50 முதல் 100 மாணவர்களுடன் எய்ம்ஸ் மருத்துவமனையை தற்காலிகமாக அருகிலுள்ள மருத்துவ கல்லூரியில் தொடங்க முடியுமா என்பது தொடர்பாக தமிழக அரசிடம் கேட்டு தெரிவிக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதை வரும் 16 ஆம் தேதிக்குள் தெரிவிக்குமாறும் அறிவுறுத்தியுள்ளனர்.” என்றும் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Advertisement:
SHARE

Related posts

’நான் ரொம்ப நல்லா இருக்கேன்..’ வீடியோ வெளியிட்டு வதந்தியை மறுத்த ஷகிலா

Gayathri Venkatesan

செமஸ்டர் கல்வி முறையை அறிமுகப்படுத்திய அனந்த கிருஷ்ணன் மறைவு!

கருப்பு பூஞ்சையால் மக்கள் பயப்படவேண்டாம்: ராதாகிருஷ்ணன்!