நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 3 கோடியை கடந்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களை சந்தித்த அகர்வால், “கொரோனா பாதிப்பு நாடு முழுவதும் குறைந்து வந்தாலும் ஒரு சில மாநிலங்களில் சற்று அதிகரித்து வருகிறது. ஒட்டுமொத்தமாக 86 மாவட்டங்களில் தினசரி கொரோனா பாதிப்பு 100-க்கு அதிகமாக பதிவாகி வருகிறது. தினசரி கொரோனா பாதிப்பில் 80 சதவீத பாதிப்புகள் 90 மாவட்டங்களில் இருந்து மட்டும் பதிவாகியுள்ளது. தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களிலும், புதுச்சேரியில் 1 மாவட்டத்திலும் கொரோனா பரவல் சற்று அதிகரித்து காணப்படுகிறது. கேரளா மற்றும் மகாராஷ்டிராவில் கொரோனா பரவல் விகிதம் அதிகரித்து உள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சுற்றுலா தலங்கள் மூலம் நாம் மீண்டும் பிரச்சனையை சந்தித்து வருகிறோம். பல இடங்களில் மக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் உள்ளனர், முறையாக முக கவசம் அணிவதில்லை. கர்ப்பிணிகள் அனைவரும் தடுப்பூசியை செலுத்தி கொள்ள வேண்டும், அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. மேலும், இந்தியாவில் பயன்பாட்டில் உள்ள 3 தடுப்பூசிகளையும் கர்ப்பிணிகள் செலுத்தி கொள்ளலாம்.” என்று அகர்வால் கூறியுள்ளார்.