போக்குவரத்து விதிமீறலுக்கு அபராதம் செலுத்த கியூஆர் கோடு

சென்னையில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகள் QR Code ஸ்கேன் செய்து, Paytm மூலம் அபராதம் விதிக்கும் முறையை சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் துவக்கி வைத்தார். இதனை தொடர்ந்து போக்குவரத்து…

சென்னையில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகள் QR Code ஸ்கேன் செய்து, Paytm மூலம் அபராதம் விதிக்கும் முறையை சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் துவக்கி வைத்தார்.

இதனை தொடர்ந்து போக்குவரத்து காவலர்களுக்கு QR code அட்டைகளை சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் வழங்கினார்.

இதுகுறித்து காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கூறியதாவது:

2018க்கு பிறகு இ சலான் மூலம் அபரதாம் விதிக்கபட்டது. ஆனால் போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் அபராத தொகை கட்டிவதில் தாமதம் ஏற்பட்டது.

தற்போது அறிமுகப்படுத்தபப்ட்டுள்ள pay tm QR code மூலம் போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் கட்டுவதில் சிரமம இருக்காது. இன்று தான் இந்த pay Tm மூலம் கட்டுவது அறிமுகப்ப்டுத்தியுள்ளேன். இதனை தொடர்ந்து சென்னை முழுவதும் இந்த முறை இதனை அறிமுகப்படுத்த உள்ளோம்

தற்போது 300 PAY TM அட்டைகளை போக்குவரத்து காவலர்களுக்கு கொடுத்துள்ளோம் என்றார் சங்கர் ஜிவால்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.