பந்தலூர் அருகே உள்ள கூமூலா கிராமத்தில் தேயிலைத்தோட்டத்திற்குள் நுழைந்த 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பை வனத்துறையினர் பாதுகாப்பாக மீட்டு வனப்பகுதியில் விடுவித்தனர்.
நீலகிரி மாவட்டம் பந்தலூர் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள கூமூலா
கிராமத்தில் தேயிலை தோட்டத்தில் 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று நுழைந்து
இருப்பதாக அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு அளித்தனர்.
தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் பந்தலூர் வனவர் செல்லதுரை தலைமையில் தேயிலை தோட்டத்தில் நுழைந்து இருந்த 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பை பாதுகாப்பாக மீட்டனர்.
பின் கீழ்நாடுகாணி வனச்சரகத்திற்கு உட்பட்ட அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு சென்று மலைப்பாம்பினை விடுவித்தனர்.
ரூபி.காமராஜ்








