ரஷ்ய படைகள் அணு ஆயுத பயிற்சி மேற்கொண்டது அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து ரஷ்யா – உக்ரைன் இடையே போர் நீடித்து வருகிறது. இதில் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக உள்ளன. இந்தியா உள்ளிட்ட நாடுகள் போரை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தற்போது உக்ரைனுடனான போரில் ரஷ்யா அணு ஆயுத தாக்குதல்களை எந்நேரமும் கையில் எடுக்கும் என அச்சம் நிலவி வரும் நிலையில், ரஷ்ய படைகள் இன்று அணு ஆயுத பயிற்சி மேற்கொண்டது. இதனை ரஷ்ய அதிபர் விளாடிமர் புடின் பார்வையிட்டார். இந்த சோதனையின் ஒரு பகுதியாக ரஷ்ய அணுசக்தி படைகள் மூலம் பாலிஸ்டிக் மற்றும் க்ரூஸ் ஏவுகணைகளை சோதனை செய்து பார்க்கப்பட்டன. மேலும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை உள்ளிட்ட சோதனைகளும், முக்கிய பயிற்சிகளும் மேற்கொள்ளப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைன் “டர்ட்டி” பாம் DIRTY BOMB எனப்படும் ரேடியோ ஆக்டிவ் பொருட்களை கொண்ட நவீன பயங்கர வெடிகுண்டை பயன்படுத்தக்கூடும் என ரஷ்யா தரப்பில் குற்றம்சாட்டப்பட்டு வரும் நிலையில், ரஷ்யாவின் அணு ஆயுத பயிற்சி பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.