இளம் நடிகை உயிரிழப்பு – புஷ்பா திரைப்பட நடிகர் ஜெகதீஷ் பிரதாப் கைது!

இளம் நடிகை உயிரிழந்த விவகாரத்தில் புஷ்பா திரைப்படத்தில் நடித்த ஜெகதீஷ் பிரதாப் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார். அல்லு அர்ஜுனின் புஷ்பா திரைப்படம் கடந்த 2022 ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.…

இளம் நடிகை உயிரிழந்த விவகாரத்தில் புஷ்பா திரைப்படத்தில் நடித்த ஜெகதீஷ் பிரதாப் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார்.

அல்லு அர்ஜுனின் புஷ்பா திரைப்படம் கடந்த 2022 ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக வட மாநிலங்களில் இந்தப் படம் பெரும் வெற்றி படமாக அமைந்தது. இப்படத்தின் பாடல்கள் உலகம் முழுவதும் புகழ்பெற்றது குறிப்பிடத்தக்கது.

அதனை தொடர்ந்து, புஷ்பா 2 படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.  முதல் பாகத்தில் அல்லு அர்ஜுனுக்கு நண்பனாக கேசவா என்கிற கதாபாத்திரத்தில் ஜெகதீஷ் பிரதாப் நடித்துள்ளார். தன் நடிப்பால் பாராட்டுகளைப் பெற்று புகழடைந்தார். தற்போது, புஷ்பா-2 படத்திலும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், இளம் நடிகை ஒருவர் ஜெகதீஷ் கொடுத்த தொல்லையால் உயிரிழந்தாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இதனால், ஜெகதீஷ் கடந்த ஒரு வாரமாக தலைமறைவாக இருந்ததாகக் கூறப்பட்ட நிலையில், நேற்று(டிச.6) காவல்துறை அவரைக் கைது செய்துள்ளது.

அதனை தொடர்ந்து, விசாரணையில், உயிரை மாய்த்துக் கொண்ட பெண்ணுடன் ஜெகதீஷ் ‘லிவ் இன்’ உறவிலிருந்தார் என்றும் கருத்து வேறுபாடுகளால் பிரிந்த பின், அப்பெண் உயிரிழந்தார் என்றும் அவர் கூறியிருக்கிறார். உயிரிழந்த  நடிகையின் தந்தை அளித்த புகாரின்பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.