சுதந்திர தினத்தில் வெளியாகிறது ’புஷ்பா 2’ – ரிலீஸ் தேதியை அறிவித்தது படக்குழு!!

புஷ்பா  படத்தின் இரண்டாம் பாகம் அடுத்தாண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்த படம் ‘புஷ்பா’. பான் இந்தியா படமாக வெளியான ’புஷ்பா’ திரைப்படத்தில்…

புஷ்பா  படத்தின் இரண்டாம் பாகம் அடுத்தாண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்த படம் ‘புஷ்பா’. பான் இந்தியா படமாக வெளியான ’புஷ்பா’ திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்துள்ளார். ஃபகத் ஃபாசில், சுனில், அனசூயா, தனஞ்செயா என பல்வேறு திரைநட்சத்திரங்கள் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர்.

தேவிஸ்ரீபிரசாத் இசையில் உருவான இப்படம் தெலுங்கு, தமிழ், இந்தி மொழிகளில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் நடித்த அல்லு அர்ஜூனுக்கு சிறந்த நடிகருக்கான (2021) தேசிய விருதும் அறிவிக்கப்பட்டது.

இதையும் படியுங்கள் : நான் ரெடி!! – 10 ஆண்டுகளுக்கு பின் செல்வராகவனுக்கு ரிப்ளை பண்ண த்ரிஷா

இதனையடுத்து புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டது. முதல் பாகத்தை விட அதிக பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ரசிகர்களின் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இந்நிலையில், புஷ்பா 2 திரைப்படம், 2024-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியாகும் என படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.