10 ஆண்டுகளுக்கு பிறகு இயக்குநர் செல்வராகவனுக்கு நடிகை த்ரிஷா அளித்துள்ள ரிப்ளை இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் செல்வராகவன். துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் அறிமுகமான இவர், காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, இரண்டாம் உலகம், நெஞ்சம் மறப்பதில்லை, நானே வருவேன் என குறிப்பிட்ட இடைவெளியில் வெற்றி படங்களை ரசிகர்களுக்கு வழங்கினார்.
இவரது இயக்கத்தில் கடந்த 2007-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான திரைப்படம் ‘ஆடவாரி மாடலருக்கு அர்தாலே வேறுலே’. இதில் கதாநாயகனாக நடிகர் வெங்கடேஷ், கதாநாயகியாக நடிகை த்ரிஷா நடித்திருந்தனர். இத்திரைப்படம் ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், தமிழில் ‘யாரடி நீ மோகினி’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. அதுவும் மாபெரும் வெற்றி பெற்றது.
இதையும் படியுங்கள் : மகளிருக்கு ரூ.1000 – அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இறுதிக்கட்ட ஆலோசனை!!
இதனிடையே, கடந்த 2013-ம் ஆண்டு செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில்,
“நீண்ட நாட்களுக்கு பின்னர் ’ஆடவாரி மாடலருக்கு அர்தாலே வேறுலே’ திரைப்படத்தை பார்த்தேன். வெங்கடேஷ் மற்றும் த்ரிஷாவுடன் பணியாற்றியதில் மகிழ்ச்சி. இரண்டாம் பாகம் எடுக்கவும் தயார்” என்று பதிவிட்டிருந்தார்.
https://twitter.com/trishtrashers/status/1700909888375795934
இந்நிலையில், 10 ஆண்டுகளுக்கு பின்னர் இயக்குநர் செல்வராகவனின் ட்வீட்டுக்கு நடிகை த்ரிஷா பதிலளித்துள்ளார். ’நான் ரெடி’ என த்ரிஷா கொடுத்துள்ள பதில், தற்போது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.







