இந்தியா – சவுதி அரேபியா பேச்சுவார்த்தை! புதிய பொருளாதார வழித்தட ஒப்பந்தம் குறித்தும் விவாதம்!

இந்தியா – சவுதி அரேபியா பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில் அதில் புதிய பொருளாதார வழித்தடம் குறித்தும்  சிறப்புமிக்க ஒப்பந்தம் குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது. ஜி20 உச்சி மாநாட்டை தொடர்ந்து சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் முகமது…

இந்தியா – சவுதி அரேபியா பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில் அதில் புதிய பொருளாதார வழித்தடம் குறித்தும்  சிறப்புமிக்க ஒப்பந்தம் குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது.

ஜி20 உச்சி மாநாட்டை தொடர்ந்து சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் உடன் இந்திய பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இது இருநாடுகளுக்கு இடையிலான உறவை வலுப்படுத்தும் வகையில் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தலைநகர் டெல்லியில் ஜி20 மாநாடு கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்றது. இதில், பல்வேறு உலக நாடுகளை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் ஜி20 மாநாட்டிற்கு வந்திருந்த சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் உடன் பிரதமர் மோடி இன்று தனியாக சந்தித்து பேசினார். முன்னதாக குடியரசு தலைவர் மாளிகையில் முகமது பின் சல்மானிற்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

இதையடுத்து பேசுகையில், ஜி20 மாநாட்டிற்கு இந்தியா தலைமை தாங்கி நடத்தி கொடுத்தது பாராட்டத்தக்கது. மிகவும் சிறப்பாக நடத்தி முடித்துள்ளது. இதை சவுதி அரேபியா மட்டுமின்றி, ஒட்டுமொத்த நாடும் தான் சொல்கிறது. இந்த மாநாட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இவை அனைத்து நாடுகளுக்கும் பெரிதும் உதவிகரமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்தியா – சவுதி அரேபியா ஆகிய இரண்டு நாடுகளும் வளமான எதிர்காலத்தை பெறுவதற்கு ஒன்றிணைந்து வேலை செய்வோம் என்று கூறினார்.

 

அப்போது பிரதமர் மோடி பேசியதாவது:

இந்தியா, மேற்கு ஆசியா மற்றும் ஐரோப்பா இடையே வரலாற்று சிறப்புமிக்க பொருளாதார வழித்தடத்தை துவங்க முடிவு செய்துள்ளோம். இந்த வழித்தடமானது இரு நாடுகளை இணைப்பது மட்டுமின்றி, ஆசியா, மேற்கு ஆசியா மற்றும் ஐரோப்பா இடையே பொருளாதார வளர்ச்சி மற்றும் டிஜிட்டல் இணைப்பை வழங்கவும் உதவும்.

உங்கள் தலைமை மற்றும் தொலைநோக்கு பார்வை 2030ன் கீழ், சவுதி அரேபியா மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சியை கண்டுள்ளது. இந்தியாவுக்கான நட்பு நாடுகளில் சவுதி அரேபியா முக்கியமானது. இரு நாட்டு உறவு சர்வதேச வளர்ச்சிக்கு உதவும். ஜி20 உச்சிமாநாட்டின் வெற்றிக்கு அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக நான் மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.