#Pune | ‘அம்மாவின் நினைவாக வைத்திருந்த ஸ்கூட்டர் மாயம்’ | திருடனுக்கு கோரிக்கை வைத்த மகன்!

தாயின் நினைவாக வைத்திருந்த ஸ்கூட்டரைத் திருப்பி தருவோருக்கு புதிய இருசக்கர வாகனம் வாங்கி தருவதாக புனேவை சேர்ந்தவர் சமுக வலைதளத்தில் பதிவிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புனேவைச் சேர்ந்த அபயின் என்பவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து…

Pune man ,new scooter , thief ,stole ,late mother,

தாயின் நினைவாக வைத்திருந்த ஸ்கூட்டரைத் திருப்பி தருவோருக்கு புதிய இருசக்கர வாகனம் வாங்கி தருவதாக புனேவை சேர்ந்தவர் சமுக வலைதளத்தில் பதிவிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புனேவைச் சேர்ந்த அபயின் என்பவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரின் தாயார் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் உயிரிழந்தார். மேலும், அவரது தந்தையும் முன்பு கொரோனா தொற்றால் உயிரிழந்தார்.

இந்நிலையில், தனது தாயின் நினைவாக வைத்திருந்த இருசக்கர வாகனம் தொலைந்து போனதாக காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக அவர் தனது சமுக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதில் அவர் தெரிவித்திருந்ததாவது :

இதையும் படியுங்கள் : நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் | முதல் இன்னிங்ஸில் 46 ரன்களுக்கு இந்தியா ஆல் அவுட்!

“தசரா பண்டிகை அன்று கோத்ருட்டில் உள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜ் சிலை அருகே தனது கருப்பு ஆக்டிவா MH14B6036 திருடப்பட்டது. அருகிலுள்ள பகுதிகளில் தேடியும் கிடைக்கவில்லை. அந்த இருசக்கர வாகனம் தனது தாயின் கடைசி நினைவாக பாதுகாப்பாக வைத்திருந்தேன். அதைக் கண்டுபிடிக்க எனக்கு உதவுங்கள். ஒரு புதிய வாகனம் வாங்கித் தருகிறேன். ஆனால் என் அம்மாவின் ஸ்கூட்டரைத் திருப்பிக் கொடுங்கள்”

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.