சிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு
விழாவில் காளைகளை காளையர்கள் அடக்கி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் லட்சுமணபட்டியில், சிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு
ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில், புதுக்கோட்டை மாவட்டம் மட்டுமல்லாது திருச்சி, சிவகங்கை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 700 காளைகள் கலந்து கொண்டன.
மாடுபிடி வீரர்கள் ஜல்லிக்கட்டு உறுதிமொழி எடுத்தப் பிறகு ஜல்லிக்கட்டு தொடங்கியது.
முன்னதாக கிராமத்தை சுற்றியுள்ள, 10க்கும் மேற்பட்டகிராமங்களில் இருந்து கோயில்
காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. இதனைத் தொடர்ந்து, வாடிவாசலில் இருந்து காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டது. வாடிவாசலில் இருந்து சீறி பாய்ந்து வரும் காளைகளை காளையர்கள் அடக்க முயன்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பல காளைகள், காளையர்களின் பிடியில் சிக்காமல் அவர்களுக்கு போக்கு காட்டியது. சில காளைகள் வீரர்களின் பிடியில் சிக்கியது. காளைகளைப் பிடித்த காளையர்களுக்கும் , வீரர்களின் பிடியில் சிக்காமல் சென்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த ஜல்லிக்கட்டை , சுற்றுவட்டாரத்தில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.