காவிரி ஆற்றில் குடிமகன்களின் அட்டகாசம்: நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் உறுதி

காவிரி ஆற்றின் பகுதியில் மது குடித்துவிட்டு அத்துமீறிய நடவடிக்கைகளில் ஈடுபடுவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் மகாபாரதி உறுதியளித்தார். மயிலாடுதுறை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், குளம் மற்றும் காவிரி ஆறுகளில்…

காவிரி ஆற்றின் பகுதியில் மது குடித்துவிட்டு அத்துமீறிய நடவடிக்கைகளில் ஈடுபடுவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் மகாபாரதி உறுதியளித்தார்.

மயிலாடுதுறை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், குளம் மற்றும் காவிரி ஆறுகளில் உள்ள குப்பைகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட துப்புரவு பணியாளர்கள் குறித்து நேரில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி ஆய்வு மேற்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து நகரின் மைய பகுதியில் காவிரி ஆற்றில் புனித துலா கட்டம் அமைந்துள்ளது. காசிக்கு இணையான ஆறு இடங்களில் மயிலாடுதுறையும் ஒன்றாக கூறப்பட்டுள்ள மயிலாடுதுறை காவிரி ஆற்றின் துலா கட்டத்தில், ஐப்பசி மாதம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடுவது வழக்கமாகும்.

இப்பகுதிகளில் மது அருந்துபவர்கள், இரவு நேரத்தில் குடித்துவிட்டு மது பாட்டில்களை அங்கேயே போட்டு செல்வதால் சுகாதாரமற்ற முறையில்  காணப்படுகின்றது. மேலும் அப்பகுதியில் பெண்கள் நடமாட முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், அங்கு ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியரிடம், மது பிரியர்களின் தொல்லை குறித்து புகார் அளித்த பெண்கள் மற்றும் பொதுமக்களுக்கு, மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, காவல்துறையினரைக் கொண்டு பாதுகாப்பு போடுவதோடு, அப்பகுதியில் குடிப்பவர்கள் குறித்து புகைப்படம் எடுத்து தனக்கு அனுப்பினால் அந்த போட்டோவை அப்பகுதியிலேயே ஒட்டி நடவடிக்கை எடுப்பதகவும் உறுதி அளித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.