புதுக்கோட்டையில் கோயில் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம்!

புதுக்கோட்டை அரிமளத்தில் செல்ல அய்யனார் கோயில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயத்தில் தமிழகம் முழுவதிலும் இருந்து 50க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. புதுக்கோட்டை மாவட்டம் அரிமளத்தில் அருள்மிகு செல்லய்யனார்…

புதுக்கோட்டை அரிமளத்தில் செல்ல அய்யனார் கோயில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயத்தில் தமிழகம் முழுவதிலும் இருந்து 50க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன.

புதுக்கோட்டை மாவட்டம் அரிமளத்தில் அருள்மிகு செல்லய்யனார் கோயில் அமைந்துள்ளது.இக்கோயிலில் குதிரை எடுப்பு திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. போட்டியில் கலந்து கொள்வதற்கென புதுக்கோட்டை மட்டுமின்றி சிவகங்கை,திருச்சி,மதுரை என பல மாவட்டங்களில் இருந்தும் ஐம்பதிற்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் வந்திருந்தன.போட்டியானது பெரிய மாடு,நடு மாடு, சிறிய மாடு என மூன்று பிரிவுகளாக நடைபெற்றது.

பெரிய மாடு பிரிவில் கலந்து கொண்ட வண்டிகளுக்கு 12கிலோ மீட்டர் தூரம் எல்லையாக நிர்ணயிக்கப்பட்டது. இதில் 9ஜோடி மாட்டு வண்டிகள் பங்கேற்றன.
நடுமாடு பிரிவில் கலந்து கொண்ட 19ஜோடி மாட்டு வண்டிகளுக்கு 9கிலோ தூரமும் எல்லையாக அறிவிக்கப்பட்டது. சிறிய மாட்டு பிரிவிற்கு 7கிலோ மீட்டர் தூரம் எல்கையாக நிர்ணயிக்கப்பட்டதில் 26 ஜோடி வண்டிகள் பங்கேற்றன.

போட்டியில் வெற்றி பெற்ற மாடுகளின் உரிமையாளர்களுக்கு  பரிசுகளும், ரொக்கப்பணமும் வழங்கப்பட்டது. போட்டியில் துள்ளி குதித்து சீறிப்பாய்ந்த காளைகளை சாலையின் இருபுறமும் திரண்டிருந்த பார்வையாளர்கள் கரவொலி எழுப்பி ஆரவாரத்துடன் கண்டு ரசித்தனர்.

வேந்தன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.