பொன்னமராவதி சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு சன்மார்க்க சபை கல்லூரியின் சார்பாக “தமிழறிஞர்
செம்மல் வ.சுப.மாணிக்கனார் விருது” வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள மேலைச்சிவபுரி கணேசர் கலை
அறிவியல் கல்லூரி, சன்மார்க்க சபை சார்பில் சிறப்பாக பணி புரிந்து வரும் அரசு
மேல்நிலைப்பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு “செம்மல் வ.சுப.மாணிக்கனார் விருது” வழங்கும் விழா நடைபெற்றது.
விழாவிற்கு சன்மார்க்கசபைத்தலைவர் நாகப்பன் தலைமைவகித்தார். விழாவில் சிறப்பாக பணியாற்றிப் பள்ளியை மேன்மையுறச்செய்து வரும் சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் கலந்து கொண்டனர்.
அவர்களுக்கு தமிழறிஞர் “செம்மல் வ.சுப.மாணிக்கனார்” விருதினை கல்லூரிக்குழுத் தலைவர் அ.சாமிநாதன், செயலர் சி.ரமணப்பிரியன், சன்மார்க்கசபை செயலர் பழ.சாமிநாதன் ஆகியோர் வழங்கி வாழ்த்துகளைத் தெரிவித்தனர். தொடர்ந்து விருது பெற்ற தலைமையாசிரியர்கள் ஏற்புரையாற்றினர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
—ரெ.வீரம்மாதேவி