உலக மகளிர் தினத்தின் ஒரு பகுதியாக கும்பகோணத்தில் ஐந்து வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளுக்கான நூதன ஆடை அணியும் போட்டி (FashionShow) நடைபெற்றது. இதில், பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 150க்கு மேற்பட்ட பெண் குழந்தைகள் பங்கேற்றனர்.
கும்பகோணத்தில் உள்ள தனியார் பள்ளியில் உலக மகளிர் தினத்தை கொண்டாடும்
வகையிலும், பெண் குழந்தைகளை போற்றும் வகையிலும் இன்று ஐந்து வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கான நவீன ஆடைகள் அணிந்து ஒய்யாரமாக நடைபயிலும் போட்டி நடைபெற்றது. சிறப்பாக பங்கேற்ற குழந்தைகளுக்குப் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். போட்டியில் கலந்துகொண்ட அனைவருக்கும் ஆறுதல் பரிசுகள் வழங்கப்பட்டன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதையும் படிக்க: மின் கம்பி உரசியதில் தீப்பற்றி எரிந்த வைக்கோல் ஏற்றி வந்த லாரி!
இதில், பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 150 குழந்தைகள் மற்றும் அவர்களது பெற்றோர்களும் கலந்துகொண்டனர். இதில், ஒரு குழந்தை நாளிதழ்களை கொண்டு வடிவமைக்கப்பட்ட ஆடை மற்றும் தொப்பியை அணிந்து வந்தது பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியது.
-ம.பவித்ரா