முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு ஒப்புதல்!

புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பரிந்துரை செய்ததையடுத்து அதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

புதுச்சேரியில் கடந்த திங்கள்கிழமை அன்று சட்டப்பேரவையில் நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில் நாராயணசாமியின் அரசு தோல்வியடைந்ததை அடுத்து அவர் தலைமையிலான காங்கிரஸ் – திமுக கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது. நாராயணசாமியும் தனது ராஜினாமா கடிதத்தை துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனிடம் வழங்கினார்.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தும் அனுப்பட்ட அக்கடிதத்தை ஏற்றுக் கொண்டார். அதையடுத்து என்.ஆர்.சி. காங்கிரஸ், அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், குறுக்குவழியில் ஆட்சியை பிடிக்க விரும்பவில்லை என்றும் நேர்மையாக வரும் சட்டப்பேரவைத் தேர்தலை சந்தித்து வெற்றிப் பெற்று ஆட்சியமைப்போம் என புதுச்சேரி அதிமுக சட்டப்பேரவைத் தலைவர் அன்பழகனும் மற்றும் பாஜக புதுச்சேரி தலைவரும் நியமன சட்டப்பேரைவை உறுப்பினருமான சாமிநாதன் ஆகியோர் திட்டவட்டமாக கூறினர்.

இந்நிலையில் எதிர்க்கட்சிகள் முன்வந்து ஆட்சியமைக்க கோராததால் புதுச்சேரி மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பரிந்துரை செய்து கடிதம் எழுதினார். அதனை ஏற்ற மத்திய அமைச்சரவை தற்போது புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு ஒப்புதல் வழங்கி உள்ளது.

Advertisement:

Related posts

தமிழகத்தில் ரூ.300 கோடி பறிமுதல்: சத்யபிரதா சாகு!

எல்.ரேணுகாதேவி

சொந்த தொகுதியில் வாக்களித்த ப.சிதம்பரம்!

Karthick

மன்மோகன் சிங் உடல் நிலை: சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் விளக்கம்

Karthick