கொரோனா பரவல் காரணமாக புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம் நாளை முதல் வரும் 27ம் தேதி வரை மூடப்படும் என பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக 3,32,730 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தொற்று பாதிக்கப்பட்டு ஒரே நாளில் 2,263 பேர் உயிரிழந்துள்ளனர். அதே போல புதுச்சேரியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
மத்திய பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள், அதிகாரிகள், பணியாளர்கள் மற்றும் மாணவர்களுக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், பாதுகாப்பு நடவடிக்கையாக, நாளை முதல் வரும் 27ம் தேதி வரை மத்திய பல்கலைக்கழக வளாகம் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பல்கலைக்கழகத்தில் அத்தியாவசிய பணிகளுக்கு இந்த உத்தரவு பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.







