பிரதமர் மோடிக்கு முதல்வர் கடிதம்!

தமிழகத்திற்குக் கூடுதலாக 20 லட்சம் தடுப்பூசிகள் வழங்கக் கோரி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். கொரோனா வைரஸ் தொற்றால் நேற்றைய நிலவரப்படி ஒரே நாளில் 12,652 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நோய்த்…

தமிழகத்திற்குக் கூடுதலாக 20 லட்சம் தடுப்பூசிகள் வழங்கக் கோரி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றால் நேற்றைய நிலவரப்படி ஒரே நாளில் 12,652 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 59 ஆக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் நேற்றைய நிலவரப்படி 1,13,144 நபர்களுக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் 12,652 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 10,37,711 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்று மட்டும் சிகிச்சைப் பலனின்றி 59 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனால் உயிரிழப்பின் மொத்த எண்ணிக்கை 13,317 ஆக உயர்ந்துள்ளது. 1,13,144 நபர்களுக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் 12,652 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 10,37,711 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்று மட்டும் சிகிச்சைப் பலனின்றி 59 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழப்பின் மொத்த எண்ணிக்கை 13,317 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாகத் தமிழ்நாட்டில் மே 1-ம் தேதி முதல் 18 வயது மேற்பட்டவர்களுக்கு இலவ தடுப்பூசி செலுத்தப்படும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனைத்தொடர்ந்து பிரதமர் மோடிக்கு மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், தமிழகத்தில் நாள்தோறும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால் தமிழகத்துக்குக் கூடுதலாக 20 லட்சம் தடுப்பூசி வழங்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு 2 லட்சம் தடுப்பூசி செலுத்த இலக்கை நிர்ணயித்து இருப்பதாகவும் தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை என்றும் இதுவரை 47.31 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகு என்றும் ரெம்டெசிவர் மருந்துகள் தமிழகத்திற்குத் தடையின்றி கிடைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டிருந்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.